வதந்திகள் மூலம் எதை சாதிக்க போகிறீர்கள் . அது மட்டுமில்லை உலகமே போற்றும் உலக அறிவிப்பாளர் .
உங்களுக்கு இப்படி மனசு எங்கிருந்து வருகிறது . கொஞ்சம் கூட மனசு வலிக்கவில்லையா .
இப்படிபட்ட செய்தியை பரப்பியவர்கள் பாவிகள் . அவர்களுக்கு இந்த தவறுக்கு மன்னிப்பே கிடையாது .
இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
உலக அறிவிப்பாளர், நேயர் நெஞ்சங்களில் நிறைந்த பி. எச் அப்துல் ஹமீத் அவர்களுடன் இன்று (24) மாலையும் தொலைபேசியில் உரையாடினேன்.
தன்னைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகள் தொடர்பில் அவரது வேதனையை நெஞ்சு கனத்த நிலையில் கூறினார்.
இருப்பினும் நேயர்கள் தன்மீது வைத்துள்ள அன்பும் பாசத்தையும் கண்டு மனம் நெகிழ்ந்து போனேன் எனக் கூறினார்.
தனது ஆரோக்கியமான வாழ்வுக்கு இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்திக் காரியப்பர் பதிவிட்டிருந்தார்