ஒரே கனா யாருக்காக? எதற்காக? எப்படி?
இந்த குறுந் திரைப்படம் பேசப்படுமா?…
பொதுவாக ஒரு குறுந் திரைப்படமோ அல்லது பாடலோ வெளிவரும் போது அவற்றை பெருமையுடன் நாம் பகிர்ந்து அதில் பங்குகொண்ட படைப்பாளிகளை வாழ்த்தி வந்தோம் , வருவோம்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரே கனா படைப்பின் முதற் பார்வை வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தயாரிப்பில் இந்த குறுந் திரைப்படம் வெளியாகுவதாக இந்த போஸ்டரில் காண முடிந்தது .
உண்மையில் இந்த குறுந் திரைப்படத்தை தயாரிக்க செலவிடும் பணத்தை இந்த குறுந் திரைப்படத்தை காட்சிப்படுத்தி அதன் மூலம் செலவிட்ட பணத்தை பெற முடிந்தால் இது மிகவும் வரவேற்க தக்க விடயம்.
அதே நேரத்தில் இந்த ஒரே கனா மூலம் மலையகத்தில் பிறந்த எம்மை போன்ற உறவுகளின் கதையாக இருக்கலாம் .
எல்லா துறைகளிலும் மலையகத்தவர் சாதிக்க வேண்டும் , அது ஒரு கனா என்பது தான் கதையாக இருக்கலாம்.
வானொலி , தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஹம்சி மெர்லோன் இந்த ஒரே கனா குறுந் திரைப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் .
எது எப்படியோ இந்த படைப்பின் மூலம் மலையக கல்வி வளர்ச்சிக்கு நிதி கிடைத்தால் நல்லது .
படைப்பில் பங்கேற்ற அத்தனை கலைஞ்சர்களுக்கும் வாழ்த்துக்கள்