றியாஸ் , ரஞ்சன் திரையில் புதிய அவதாரம்நடிக்க தெரிந்த பலருக்கு இது உதாரணம்

றியாஸ் , ரஞ்சன் திரையில் புதிய அவதாரம்
நடிக்க தெரிந்த பலருக்கு இது உதாரணம்

ஊடகத்தில் கடமையில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமையை காட்ட சந்தர்ப்பங்கள் அமைவதில்லை.

அப்படி அமைந்தாலும் ஊடக பிரதானி அண்ணாவின் அனுமதி வேண்டும். அக்காவின் அனுமதி வேண்டும் இருவரும் அவ்வளவு இலகுவில் அனுமதி தரமாட்டார்கள்.

இவற்றை எல்லாம் தாண்டி அப்படி அனுமதி கிடைத்தாலும் நடிப்பு தெரிய வேண்டும் . அப்படி நடிப்பு தெரிந்தவர்கள் நம்மில் பலர் இருந்தாலும் அதற்கு ஒரு கெத்து வேண்டும் .

சகதி டிவியில் புகழ்பெற்ற ரியாஸ் மொஹமட் இப்போது நெதர்லாந்தில் வாழ்ந்து வருகிறார் . RTV யை இயக்கி வரும் றியாஸ் சமீபத்தில் RTV Tamil தயாரிப்பில் வெளிநாடுகளில் தொழில் புரியும் நண்பர்களின் வலியை சுமந்து வரும் ஒரு பாடல் தயாரித்து வருகிறார் .


விருது பெற்ற பாடகர் , இசையமைப்பாளர் சமீல் அற்புதமாக இசையமைத்து பாடியுள்ளார் .

பாடல் வரிகளை ரியாஸ் மொஹமட் நான் எழுதியுள்ளார் வெகு விரைவில் வெளிவர இருக்கும்

இந்தப்பாடல் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் தேசிய கீதமாகும் என்பதில் சந்தேகமில்லை .

நமது ஊடகவியலாளர்கள் இவ்வளவு திறமை கொண்டவர்களா? என்று வியப்பாக உள்ளது .

ரியாஸ் , அருண் போன்று நடிக்க தெரிந்த ஊடகவியலாளர்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் .

இருவரது படைப்பும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!