வீரகேசரியில் இருந்து விடைபெற்றால் என்ன?என்றும் ஊடகத்துறையில் தீர்க்கதரிசி காரியப்பர்

பல தசாப்த காலமாக ஊடகத்துறையில் சாதிக்க நம்பிக்கை வேண்டும் .

அந்த நம்பிக்கை உள்ள பலர் இருந்தாலும் நம்ம வீரகேசரி சித்திக் காரியப்பர் அவர்களை இலகுவில் மறந்து விட முடியாது .

வீரகேசரியில் இருந்து விலகியது தொடர்பாக அவர் கூறியது .

வீரகேசரி நிறுவனத்திலிருந்து இம்மாத இறுதியுடன் நான் விலகிச் செல்கிறேன். இது தொடர்பான வைபவம் கடந்த 22 ஆம் திகதி எமது கிராண்ட்பாஸ் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பிரியாவிடை வைபவம் என் மனதை நெகிழச் செய்தது. எமது முகாமைத்துவ பணிப்பானர் குமார் நடேசன் அவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில்நாதன் அவர்கள் மற்றும் அன்றைய தினம் கடமைக்கு வந்த அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். வெறும் நேநீர் வைபம் என்றே இதனை நான் நினைத்தேன். ஆனால் அங்கு இடம்பெற்ற விடயங்கள் அவர்களின் அன்பால் என்னைக் கட்டிப்போட்டது.

அங்கு முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், செய்திப் பணிப்பாளர் பிரபாகன், வீரகேசரி மற்றும் வாரவெளியீடுகளின் ஆசிரியர் ஸ்ரீகஜன், பிரதியாசிரியர் ஆர். சேதுராமன், விடிவென்னி ஆசிரியர் பைரூஸ், வீரகேசரி இணையதள பொறுப்பாசிரியர் பிரியதர்சன் ஆகியோர் என்னைப் பற்றி ஆற்றி உரைகள் என்னால் மறக்க முடியாதவை.

இந்தப் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அங்கிருந்து நான் விலகிச் சென்றாலும் வீரகேசரியுடனான எனது உறவு தொப்புள் கொடி உறவு போன்று தொடரும் என்பதனை இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

குறித்த நிகழ்வு தொடர்பான புகைப்படத் தொகுப்பை இங்கு பிதவிட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!