தமிழ் Fm வானொலியின் RJ பிரபு என்றால் அறியாதவர் யாரும் இல்லை . அவர் மற்றும் கிரிஜா தொகுத்து வழங்கும் காத்தாடி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது ….
இருப்பினும் காய்கிற மரத்திற்கு கல்லடிப்போர் நம்மில் பலர் உண்டு அல்லவா ? … இதில் பிரபு என்ன விதிவிலக்கா?
இலங்கை தமிழ் ஊடகங்ககளில் ஒருவன் முன்னேறி வருகிறான் என்றால் விரைவில் அவனுக்கு எதிராக சேற்று வீசப்போகிறது என்பதே உண்மை.
இருப்பினும் தற்போது பிரபு வசந்தம் வானொலியில் சேர்ந்து நேயர்களை மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.
வசந்தம் வானொலியின் மாலை நேர சிறப்பு நிகழ்ச்சி வசந்தம் Express இல் பிரபு மற்றும் அனுஷா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகிறார்கள்
கிட்டத்தட்ட 5 லட்சம் Followers களை கொண்ட வசந்தம் வானொலி முகப்புத்தக பக்கத்தில் இனி பிரபுவின் பங்கு அதிகமாக இருக்கும் .
சமூக வலைத்தளத்தில் பிரபு பேசப்படும் ஒரு RJ என்பதால் … அவர் மென்மேலும் தனது திறமையை நிச்சயம் வெளிக்காட்டுவார் என்பதில் ஐயமில்லை .
தொடர்ந்து பல வெற்றிகளை பெற எமது வாழ்த்துக்கள்