தமிழ் இணைய வானொலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இது மிகவும் சிறந்த விடயம் .
FM வானொலிகளின் ஆதிக்கம் அட்டகாசமாக இருக்கும் நேரத்தில் கையில் யாரிடமெல்லாம் இணைய வசதி இருக்கிறது அவர்கள் எந்த நேரமும் பாடல்களை கேட்கலாம் என்பதன் சிறப்பே இணைய வானொலிகள் .
அது மட்டுமில்லாமல் FM வானொலிகளுக்கு புதிய குரல்களை தெரிவு செய்யவும் இந்த இணைய வானொலிகள் பெரிதும் உதவுகிறது.
மே மாதம் 1 ஆம் திகதி சிலோன் தமிழ் fm வானொலி களம் காண்கிறது . சிலோன் தமிழ் வானொலியின் தொடக்க நிகழ்வு நிகழும் 2024ம் வருடம் மே மாதம் 1ம் திகதி முதல் யாழ் மண்ணில் அமைந்துள்ள சிலோன் தமிழ் அலுவலகத்தில் இருந்து எட்டு திக்கும் ஒலிக்க உள்ளது.
இளம் வானொலி அறிவிப்பாளர்களான கவாஸ் , கெளஷி , தீபி , அபர்ணா , சனா , கனுஜன் , ஷர்மிளா , கேனு , ரோஷினி என எல்லாமே நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலக்க காத்திருக்கிறார்கள்
சிலோன் தமிழ் வானொலியின் முக்கிய விருந்தினராக KCP என்று அழைக்கப்படும் KC Pragash
அவர்கள் தொடக்கி வைக்கின்றார்.
அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் நேசர்களையும் அன்புடன் அழைக்கிறோம் என்று ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள். அவர்களது www.fb.com/ceylontamil.lk தளத்தின் முகவரி மூலம் நீங்கள் புதிய சிலோன் தமிழ் வானொலி மற்றும் இணையத்தளத்தின் சேவையை பெறலாம் .
புதிய சிலோன் தமிழ் வானொலிக்கு எமது இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்