இன்னும் BH அப்துல் ஹமீது ஐயா போல் FM இல் பேசுறாங்க.. என்று OC Wifi சமூக வலைத்தள நிறுவுனர் யசோதரன் வீரகேசரி ஊடகவியலாளர் நேசமணிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார் .
தற்ப்போது சக்தி தொலைக்காட்சியில் சக்தி கிரவுன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நம்ம யசோதரன் ரெம்ப பிசியாக இருக்கிறார் .
தனது வீடியோக்களில் பிரதேச பேச்சு மொழிகளில் பேசி மக்களை மகிழ்விக்கும் யசோதரன் இந்திய பிரபலங்களான Black Sheep விக்னேஷ் , மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் இப்போது போல் எப்போதும் பிரதேச பேச்சு மொழியை பின்பற்றி வீடியோ செய்யுங்கள் என்று கேட்டதையும் நினைவு கூறினார் .
இலங்கை UHF தொலைக்காட்சிகள் இன்னும் பழைய முறையை தொடர்வதையும் சாட்லைட் மூலம் இவர்கள் வர வேண்டும் என்பதையும் எடுத்துகாட்டிய யசோ அவர்களது சமூக வலைத்தள தவறுகளையும் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை .
எது எப்படியோ புதிய யூ tubers க்கு நிறைய யோசனை சொல்லி இருக்கிறார் ….