இலங்கையின் UHF இல் முதலாவது தமிழ் மற்றும் சிங்களத்தில் செய்திகளை வழங்கும் தனி தொலைக்காட்சி சேவையை டான் குழுமம் ஆரம்பித்தது .
யுஎச்எவ்-22 அலைவரிசையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் டான் செய்திகள் – ஒளிபரப்பு நிகழ்வு ஆரம்ப நிகழ்வை மிக பிரம்மாண்டமாக டான் குழுமம் நடத்தியது .
இதன் ஆரம்ப வைபவம் BMICH கேட்போர் கூடத்தில் நடந்தது .பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச , பாராளுமன்ற உறுப்பினர்களான சரித ஹேரத் , ஈரான் விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வில் பேசிய டான் குழும தலைவர் குகநாதன் அவர்கள் “ நாங்கள் TNA அல்லது தமிழ் காங்கிரஸ் டிவி அல்ல ” என்றும் அவர்கள் அனைவரும் எது பேசினாலும் எடிட் செய்யமால் போடுவோம் என்று கூறினார் .
தொடர்ந்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பேசும் போது “இந்த புதிய அலைவரிசையின் மூலம் இலங்கையில் ஒரு ஒற்றுமையான நாட்டை கட்டியெழுப்ப என்னுடைய வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன் என்றார் “
நாமும் புதிய யுஎச்எவ்-22 அலைவரிசையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் டான் செய்திகள் தொலைக்காட்சியின் சேவை வெற்றியடைய வாழ்த்துகின்றோம் .