இலங்கையின் பல இசை கலைஞர்கள் மலையகத்தில் இருந்து உருவாகியுள்ளார்கள்.
அதில் ஒரு சிலர் சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனால் பல புதியவர்களை நாம் கண்டுக்கொள்வதில்லை . இது தான் மூத்தவர்களும் , ஊடகங்களும் செய்யும் தவறு .
பழைய ஏற்கனவே பல மேடைகளில் பாடி , சாதனை படைத்தவர்களை புறக்கணிக்காமல் புதியவர்களுக்கும் எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் .
அப்படி புதியவர்கள் பலருக்கு மத்தியில் எமக்கு அறியப்பட்டவர் கவின் ஷாந்த் . பல இசை திறமைகளை தன்னுள் கொண்ட ஒரு படைப்பாளி .
மிக இளம் வயது என்பதால் இவருக்கு இசையில் நல்ல எதிர்காலம் உள்ளது .சைலன்ட் டோன் என்ற யு Tube தளத்தின் மூலம் அவரின் படைப்புக்களை பதிவு செய்கிறார் .
நாம் அவரது திறமையை பாராட்டி அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் . இதுவே வளர்ந்து வரும் ஒரு படைப்பாளிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.