நமது நாட்டில் பல இசை துறை சார்ந்த பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே நமது வளர்ந்துவரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்த முடியும் .
அதில் நாம் குறிப்பிட்டு சொல்ல கூடியவர் இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா .
மலையக இசைக்குயில் அசானிக்கு கண்டியில் பாராட்டும், பரிசளிப்பும் ஸ்ருதி பிரபா தலைமையில் கண்டியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றது.
கண்டியில் புதிதாக திறந்துவைக்கப்பட்ட பழ. முத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவல்லரியின் மூலம் பெறுமதிமிக்க தங்க நகை அசானிக்கு பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அசானியின் பெற்றோர் மற்றும் பழ. முத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவல்லரியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அசானிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.