இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக நடந்து வருகிறது.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை அடிப்படியாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நம்ம நாட்டின் நடிகர் கபில் ஷாம் இந்த படத்தில் நடிக்கிறார் .
இது தொடர்பாக கபில் எமக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவிக்கிறார்
“பெருந்தன்மை இல்லாத ஒரு இயக்குனர் பெருந்தன்மை இல்லாத ஒரு நடிகரோடு பணி பணியாற்றியிருக்கிறேன்
என்பதில் பெருமை கொள்கிறேன் கிட்டத்தட்ட ஒரு 20 டேஸ் நடந்த சூட்டிங் இந்தப் படத்தில் எனக்கு நல்ல சிறந்த அனுபவம் ஒன்று கிடைத்தது என்று தான் நான் பெருமை கொள்கிறேன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களோடு வருவேன்”
என்று மகிழ்ச்சியுடன் கூறினார்….மேலும் அவர் கூறுகையில்
“என்ன பொருத்தவரை காட்சிகளில் குறைவாக வந்தாலும் என்னுடைய இத்தனை வருட உழைப்புக்கு கிடைத்த என் முதலாவது படி என்று நான் அதை எடுத்துக் கொள்கிறேன்”
வாட்சு இயக்கத்தில் வெளி வந்த வியல் பாடலில் எனது நடிப்பை பார்த்து தான் என்னோட லுக் பார்த்து தேர்வு செய்தார்கள் ஆடிஷன் இல்லாமல் தெரிவு செய்யப்பட்டதால் நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான் இது நல்ல அனுபவம் நல்ல மனிதர்கள் சந்தித்தேன் சந்தித்துள்ளேன்”
எமக்கும் பெரும் மகிழ்ச்சியே இது போன்ற எமது படைப்பாளிக்கு தென்னிந்திய வாய்ப்பு கிடைத்தது .
தொடர்ந்தும் பல வாய்ப்பு அவருக்கு கிடைக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.