“மாயாவே மா” தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இனைந்து வெளியிடப்பட்ட ஒரு அழகான காதல் காவியம். இது நம் நாட்டு கலைஞர் சஞ்ஜய் யோ ( sanjai yo) அவர்களின் 7வது பாடலாகும்.
மலேசியாவில் வசிக்கும் இவர் நம் நாட்டு கலைஞர்களில் பன்முக கலைஞராக மிளிர்கின்றார்.இந்த பாடலை தமிழில் வரிகள் புனைந்து இவரே பாடியுள்ளார்.
இந்த பாடலை இயற்றி, சிங்கள மொழியில் எழுதி பாடியது இந்திரஜித் அவர்கள். பாடலுக்கான இசையை பிரபல இசையமைப்பாளர் அசிர பெர்ணாண்டோ தந்துள்ளார்.
“மாயாவே மா” காணொளியை தயாரிக்க சஞ்ஜய் யோ பிரத்தியேகமாக இலங்கை வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்து.
இயற்கை எழில் கொஞ்சும் தான் வளர்ந்த சொந்த இடமான கண்டி,கலஹா பிரதேசத்தின் அழகை உலகறிய செய்யும் விதமாக இங்கேயே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
இதுவரை காலமும் மலேசிய நடிகர்,நடிகைகளை மட்டும் தனது பாடல்களில் நடிக்க வைத்த சஞ்ஜய் யோ, முதன் முதலாக இலங்கை கலைஞர்களை நடிக்க வைத்தது சிறப்பம்சமாகும்.
“மாயாவே மா” வின் கதாநாயகி த.ஸ்ரீவருணி புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.மற்றும் உஷா,ஷங்கரி, தயா அத்தநாயக்க, நிமலா அத்தநாயக்க உடன் சஞ்ஜய் யோ கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக சரோன் ஜோ பணியாற்றி உள்ளார். ஒப்பனை வேலைகளை அகல் சகி மிக நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
தேசிய விருது வென்ற சுவரொட்டி வடிவமைப்பாளார் வீ.எம் திலோஜன் மீண்டும் சஞ்ஜய் யோ அவர்களுடன் கைக்கோர்க்கின்றார்.
இந்த காணொளியின் கதை மற்றும் திரைக்கதையை சஞ்ஜய் யோ எழுதியது மட்டுமல்லாது அவரே இயக்கியுள்ளார் என்பது பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. உதவி இயக்குனராக நம் நாட்டின் வளர்ந்து வரும் இயக்குனர் ரா. சுஜிதரன் பணியாற்றி உள்ளார்.
தமிழ் சிங்கள பிரிவினைவாதங்களை உடைக்கும் வகையில் எத்தனையோ காதல்களை நாம் செவி வழியாக கேட்டுள்ளோம். உங்கள் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மருந்தாகவும் உங்களை நாடி வருகிறது சஞ்சய் யோ அவர்களின் “மாயாவே மா”. நம் மண்ணின் மைந்தர்களின் படைப்பை ஆதரிப்போம் வாருங்கள்.
பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.