STAGE KILLERZ இன் ஏலா ஏலோ பாடல்மலையக அழகும் , கலைஞர்களும் சங்கமம்

தேயிலை மனம் வீசும் அழகிய மலையகத்தின் இயற்கை அழகும் அறியப்படா மண் வாசம் கலந்த அச்சூழலின் ருசியை எடுத்துகாட்டும் STAGE KILLERZ வழங்கும் ஒரு அழகான கவர் பாடல் வெளியாகியுள்ளது.

உண்மையில் இவர்களின் இந்த முயற்சியை பாராட்ட வேண்டும் . மலையகத்தின் திறமையான கலைஞ்சர்களை சரியாக அடையாள படுத்தினால்,நிச்சயமாக அவர்கள் சிகரத்தை தொடுவார்கள் .

ஏலா ஏலோ ” பாடல் பதிவு சிறப்பாக பதிவு செய்துள்ளார்கள்
குழு-Stage killerz வின் முயற்சியில் இந்த பாடல் இயற்கை அழகை காட்டுகிறது .

நடிகர்கள். -பிரதிக்ஷன். நிஷாந்தினி மிகையில்லாத நடிப்பு அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என காட்டுகிறது .

இயக்குனர் லக்கிஷான் இன்னும் பல முயற்சிகளை எடுத்தால் நிச்சயமாக பேசப்படுவார்

லதுர்ஷன் கவினேஷ். கிருஷாந்தன்.அர்ச்சனா. லக்கிஷாந்தன் ஆகியோர் பாடலுக்கு உதவியுள்ளனர்

பாடல் குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!