நமது இலங்கை கதாநாயகன் RJ நெலு “எதிர்நீச்சல்” சக்தி , ஜனனிக்கு வில்லனாக நம்ம ஆளு

இலங்கை நடிகர்களுக்கு உள்நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் காலகட்டத்தில் அவர்களது திறமை கடல் கடந்து மிளிர்கிறது .

சன் டிவி , விஜய் டிவி , ஜீ தமிழ் என அசத்தும் நமது படைப்பாளிகள் அவர்களுக்கென்ற இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டால் நிச்சயம் வெற்றி தான் .

இன்றைய தினம் ஒளிபரப்பான சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் நமது இலங்கை பிரபலம் நெலு வில்லனாக தோன்றி அவரது ரசிகர்களுக்கு விருந்தளித்தார் .

உண்மையில் நாம் பெருமை பட வேண்டிய ஒரு தருணம் இது . காரணம் நமது நாட்டில் இருக்க கூடிய தொலைக்காட்சிகளால் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கலாம் .

ஆனால் தென்னிந்திய தொலைக்காட்சிகள் நம்மவர்களை அடையாளப்படுத்தும் போது அது எமக்கு பெருமையே .

தொடர்ந்து நெலு வெற்றிநடை போட இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!