உலகம் தமிழர்கள் பலர் இன்று பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
அதில் குறிப்பாக இலங்கை தமிழர்கள் என்றால் கொஞ்சம் மரியாதை அதிகம் காரணம் தமிழ் மொழி , மற்றும் தமிழ் பற்று அவர்களை மிஞ்ச யாருமில்லை என்பது தான் .
இதில் குறிப்பாக இலங்கை தமிழர்கள் எல்லா தென்னிந்திய திரைப்பட நடிகர்களின் படங்களையும் பார்த்து கொண்டாடி வருகிறார்கள் ‘
இந்த நிலையில் இவர்களது ரசிப்பு தன்மைக்கு எதிரவரும் 20 ஆம் திகதி ஒரு சோதனை தான் .
காரணம் நாட்டை விட்டு உயிருக்கு பயந்து தப்பி சென்ற நீதிபதி சற்குணராஜா அவர்களுக்கு நீதி கேட்டு வடக்கு மற்றும் கிழக்கில் 20 ஆம் திகதி ஹர்த்தால் நடக்கிறது .
அன்றைய தினம் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிறது .
இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் மற்றும் சிறந்த பேச்சாளருமாகிய உமாகரன் ராசையா தனது முகப்புத்தக பக்கத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறார் .
எனவே இந்த 20 ஆம் திகதி நமது சமூகம் ஒரு அடையாளமாக நிற்க வேண்டுமா இல்லை ஹார்த்தலை கண்டுகொள்ளாமல் படத்திற்கு சென்று அவமானம் பட வேண்டுமா என்ற முடிவு உங்கள் கையில்..