உலக கோப்பை கிரிக்கட் நடைபெற்று வருகிறது . நமது இலங்கை அணிக்கு தெம்பூட்ட வேண்டியது நமது கடமையல்லவா?.
றன் வே ஸ்டுடியோவின் பிரதீப் ரத்னாயக்கவின் இசை , வீடியோ , மற்றும் மெலோடியில் ஸ்ரீ லங்கா கொல்லோ வசை என்ற பாடல் வெளியாகியுள்ளது .
இந்த பாடலில் 𝙳𝙼𝙳 திசாநாயக்க , இஷிதா பிரேம்நாத் The Voice Teen ,ஷமீல் ஜே , சமித் சமிந்த , ஓவினி அஞ்சனா , பியூமி விஜயசேகர ஆகியோர் தங்களது குரலை வழங்கியுள்ளார்கள் .
நமது நடிகை உமா சிறப்பு பங்களிப்பை இந்த பாடலுக்கு வழங்கியுள்ளார். பாடல் பதிவு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக நமது ஷமீல் மற்றும் இஷிதாவின் குரல்கள் நமக்கு பெருமை சேர்க்கிறது .
பாடல் குழுவிற்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.