சாதனைகள் என்பது இலகுவாக படைக்க படுவதில்லை . இதற்க்காக கடுமையான உழைப்பு முக்கியம் .
இமை வானொலியின் நிர்வாகி ரவிமயூரன்க்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரவிமயூரன் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சுவர்ணவாகினி தொலைக்காட்சி Tecnology engineer ஒலிபரப்புத்துறையில் திரு நிலுப ரணவீர அவர்கள் 25வருட சிறப்பான சேவைக்கு ஆசிய விருது கிடைத்தது…தற்போது 2023எமது இமை மீடியாவிற்கு என் சார்பில் கிடைத்ததில் என் குழுமத்திற்கும் இலங்கை நாட்டுக்கும் கிடைத்த பெருமையாக குறிப்பாக தமிழர் தாயகப்பரப்புக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்..தி.ரவிமயூரன்.
அதே போன்று இந்த விருது தொடர்பாகவும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச விருதுகள் நாட்டில் கிடைக்கும் ஏனைய விருதுகள் போல சாதாரணமாக பணத்தினாலோ செல்வாக்கினாலோ கிடைப்பது அல்ல…நாம் பெருமைப்படத்தான் வேண்டும்…நம் நாட்டிலிருந்தும் சிறப்பு மருத்துவ நிபுணரோடு ஆசிய விருதினை நாம் பெற்றுக்கொள்ளப்போவது வாழ்க்கையில் நாம் முதலில் பெற்றுக்கொண்ட சாதனையே
நாம் பார்த்த வகையில் ரவிமயூரன் மற்றும் இமை வானொலி இவர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே .
ரவிமயூரன் மற்றும் இமை வானொலிக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.