மலையகத்தின் கலை துறை என்பது சாதாரண விடயமல்ல. பலராலும் பாராட்டப்பட்ட படைப்பாளிகளை கொண்டது .
அந்த வகையில் கடந்த காலங்களில் வீடியோ பாடல்கள் பல வெளிவந்தது. ஒரு சில இயக்குனர்கள் தங்களால் முடிந்த அளவில் பாடல்களை தந்தார்கள்.
அதே நேரத்தில் குறுந் திரைப்படங்களும் வெளிவரும் பட்சத்தில் மென் மேலும் நமது படைப்புகளை வெளி உலககிற்கு எடுத்து காட்ட முடியும் .
அந்த வகையில் எதிர்வரும் 08 /10 /2023 ஞாயிற்று கிழமை காலை 09 மணிக்கு ஹட்டன் CWE மண்டபத்தில் மலையகத்தில் திறமையான இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் கண்ணா அவர்களின் இயக்கத்தில் “சாயம்” திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
இந்த நிகழ்வு முற்றிலும் இலவசமான நிகழ்வாக நடத்தப்பட்டாலும் நமது படைப்பாளிகள் ஒரு படைப்பை எடுத்து வெளியிட மிகவும் சிரமம்படுவதை நாம் காண்கிறோம் .
ஒட்டு மொத்த மலையக படைப்பாளிகளின் குரலாக லங்கா டாக்கீஸ் நாம் எதிர்வரும் காலங்களில் செயற்ப்படுவோம் .
இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.