ஒலிபரப்பாளர் ஒன்றியம் அனுதாபம்.
பிரபல கலைஞரும் அறிவிப்பாளருமான “கலைநிலா” உவைஸ் ஷெரீப் அவர்களின் மறைவு இந்த நாட்டு கலைத்துறை மற்றும் ஊடகத்துறையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியம் விடுத்திருக்கும் அனுதாப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் தலைவர் யூ எல் யாக்கூப் விடுத்திருக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… உவைஸ் ஷெரீப் எனும் கலைஞர் கடந்த பல தசாப்தங்களாக இந்த நாட்டின் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை போன்ற துறைகளில் அதிகமான நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியவர்.
தொலைக்காட்சிகளில் புனித நோன்பு காலங்களிலும் நோன்பு திறக்கும் விஷேட நிகழ்ச்சிகளையும் தயாரித்தவர்.
அது தவிர இந்திய மற்றும் உள்ளூர் கலைஞர்களை கொண்டு மேடை இசை நிகழ்ச்சிகள் பலவற்றை ஒருங்கமைத்து அறிப்பாளராகவும் தொகுத்து வழங்கிய பல்துறை ஆற்றல் கொண்ட சிறந்த கலைஞன்.
அவரது சேவையை நாடும் சமூகமும் இழந்து நிற்கும் இந்த வேளையில் அவரது குடும்பத்தினருடன் எமது ஒன்றியம் ஆழ்ந்த கவலையை பகிர்ந்து கொள்வதாகவும் வல்ல அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்ள அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஒக்டோபர் 04.
கொழும்பு.