“சிங்கப் பெண்” என்ற வார்த்தையின் அடையாளம்
நடிகை மிதுனாவின் சாதனை பயணம் தொடரும்
ஒரு பெண்ணாக ஆயிரம் விமர்சங்களை சந்திக்கும் இந்த காலகட்டத்தில் எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ளாது தனது திறமைகளை வெளிக்காட்ட எல்லோருக்கும் முடியாது .
அவர் என்ன சொல்வார் , இவர் என்ன சொல்வார் என்று பார்த்துக்கொண்டிருந்தால் கடைசியில எவரும் நம்மை பாராட்ட முன் வரமாட்டார்கள்.
இந்த கருத்திற்கு சிறந்த உதாரணம் தான் நடிகை மிதுனா . தனது நடிப்பால் நல்ல பல படைப்புக்களை தந்தவர் .
ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுத்து வெற்றியும் கண்டார் . அதே போல் வியாபார ரீதியாக ஒரு பரிசு பொருட்கள் வீட்டுக்கே வழங்கும் நிறுவனத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார் .
ஆனால் இவை அனைத்தையும் தாண்டி அன்மையில் நடந்த வட மாகாண ஆணழகர் போட்டியில் சிறப்பு பிரிவில் கலந்துகொண்ட மிதுனா தனது திறமையை வெளிக்காட்டி பலரது பாராட்டுகளையும் பெற்றார் .
இது நம் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த ஈழத்து நடிகை ஒருவரின் சாதனை என்றே கூறலாம் .
மிதுனா கால் பதித்த எல்லா துறைகளிலும் சாதனை படைத்தது வருகிறார் . தொடர்ந்து பல வெற்றி படிகளை தொட எமது வாழ்த்துக்கள்