சொப்பனசுந்தரி என்ற முழுநீள தமிழ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி EAP திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மாதவன் மகேஸ்வரனின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் ஜோயல் கிறிஸ், நரேஷ், கஜானன், நிரஞ்சனி சண்முகராஜா, பேர்லிஜா ஆகிய கலைஞர்கள் நடித்துள்ளனர்.
ஜீவானந்தன் ராம் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு வேலைகளை சமல் எச் விக்கிரமசிங்க கவனித்துள்ளதுடன், படத்தொகுப்பினை மாதவன் மகேஸ்வரனே செய்துள்ளார்.
எம் 3 ஸ்டுடியோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இலங்கை திரை கலைஞர்கள் பலரும் தங்களது பங்களிப்பை செய்துள்ளனர்.
இம் மாதம் வெளியாகும் நம்மவர்களின் இந்த படைப்புக்கு மக்களின் வரவேற்பினை எதிர்பார்த்துள்ளதுடன் , படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்