ஆசிரியர்கள் தங்களது சேவையையும் தாண்டி சமூகத்திற்கு என்ன செய்தார்கள் என்றால் அதற்கு சாட்சிகள் நிறையவே இருக்கிறது.
தான் பெற்ற கல்வியை மாணவர்களுக்கும் இனிவரும் சமூகத்திற்கும் கொண்டு செல்லும் பொறுப்பு
ஆசிரியர் அ.புனிதன் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது .
ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி கட்டுறுப் பயில்வு ஆசிரியர் அ.புனிதன் அவர்களுடைய. “இலக்கணச் சுவை” நூல் வெளியீட்டு விழா இன்று நானுஓயா நாவலர் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பான இந்நூலை வெளியிட்ட புனிதனுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.