நமது உடலில் குறைபாடுகள் இருக்கலாம் ,ஏன் நமது கால் மற்றும் கைகள் கூட நமக்கு பிறப்பிலையே இல்லாமல் இருக்கலாம்.இதனால் நாம் வருத்தப்பட்டு சோர்வடைவதுண்டு.
இந்த சோர்வு எமது தன்னம்பிக்கையை முற்றாக இல்லாமல் ஆக்ககூடியது.
தனது பிறப்பிலையே இரண்டு கைகளையும் ஒரு காலையும் இழந்தவர் மாணவி ரஷ்மி இமேஷா குணவர்தன .
எஹளியகோட மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்தவருடம் சாதாரண தர பரீட்சை எழுதியவர்.
பாடசாலையில் மிகவும் துடிப்பான மற்றும் சுறுசுறுப்பான மாணவியான ரஷ்மி இமேஷா புலமை பரீட்சையில் மிக சிறந்த சித்தி பெற்று எஹளியகோட மத்திய மகா வித்தியாலயத்தில் அனுமதி பெற்றார்.
கடந்த ஆண்டு நடந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில்
ரஷ்மி இமேஷாவுக்கு 8A,1B என்ற திறமையான சித்தி கிடைத்தது.
தனது ஒரு காலில் இவர் இந்த பரிட்சையை எழுதியுள்ளார் .எதிர்காலத்தில் ஒரு சிறந்த வணிக துறை சார்ந்த நிபுணராக வருவதே தனது லட்சியம் என ரஷ்மி இமேஷா கூறியுள்ளார் .
கைகளையும் தனது காலையும் இழந்த ரஷ்மி தன்னம்பிக்கை மூலம் வாழ்க்கையில் வெற்றிபெற்றுள்ளார் .இவருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.