சர்ச்சையில் ஈழவாணியின் -லூஸி என்ன மட்டும் நோண்டாதீங்க – தர்ஷி

ஈழவாணியின் லூஸி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு தொடர்பாக சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

நடிகை தர்ஷி பிரியா தயாரிப்பு தொடர்பாக சில பதிவுகளை முன்வைத்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.

இயக்குனர் ஈழவாணி இது தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவுஒன்றை இட்டுள்ளார்

இதோ அந்த பதிவு:

நடிகை தர்சிப்பிரியாவிற்கு (Tharshi Priya)எந்த அதிகாரமும் கொடுக்கவில்லை, லூஸி திரைப்படத் தயாரிப்புகள் பற்றி அறிக்கை விடுவதற்கு.

பொதுவாக ஒருவிடயத்தை பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே,

எந்த ஒரு செக்கன் நேரத்திலும் கூட
நான் எடுத்து முடித்த பின்பு இப்படியே போடலாமா என்று யோசிக்கவில்லை, அது அப்படியே தான் வரும்
அதில் நடித்த பெண் நடிகைகளில் Sharmila Vinothini Thirunavukarasu திலகா அழகு மிக்சர் கம்பனி அக்கா
இவர்களைத் தவிர மற்றையவர்கள் தொழில் ரீதியான நடிகைகள்,

தயாரிப்பாளர்கள் என்ற ரீதியில் நானோ அல்லது
எமது தயாரிப்பாளர்களோ இணைதயாரிப்பாளர்களோ,
Tharshi Priyaa க்கு எந்த அதிகாரமும் திரைப்படம் சம்மந்தமாக கொடுக்கவில்லை. படத்திலிருந்து ஆரை எடுப்பது, ஆரைவைப்பது அல்லது படத்தை வெளியிடப்போறம் என்றோ, அப்படியில்லாமல் பூர்விகா வை Poorvika Rasasingam எடுத்துற்று புதுசா இன்னொரு நடிகையை வைச்சு திரும்ப எடுக்கப்போறம் என்று படத்தயாரிப்புகள் பற்றி கதைப்பதற்கு எந்த நடிகைகளுக்கும் எங்கள் பூவரசிமீடியா நிறுவனம் அதிகாரமோ, தகவல் தெரிவிக்கும் அதிகாரங்களையோ கொடுக்கவில்லை.

இவை சம்பந்தமான அறிவிப்புக்களையும் முடிவுகளையும் நிறுவனம் சார்ந்தவர்கள் மட்டுமே தெரிவிப்பார்கள். எமது நிறுவனத்திலே, படம்சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்களை தெரிவிக்கும் குழுவிலோ நடிகை தர்சிப்பிரியாவை நாங்கள் வைக்கவில்லை.

ஆகவே
நண்பர்கள் விமர்சகர்கள் கழுவிஊற்றுபவர்கள் யாராக இருந்தாலும், திரைப்படத் தயாரிப்புகள் சம்பந்தமாக எதைக்கேட்பதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் கழுவிஊத்துவதாக இருந்தாலும்
கெட்டவார்த்தைகளில் பதிவுகள் போடுவதாக இருந்தாலும் எங்களைச் சார்ந்தே செய்யுங்கள்.

பாவம் தரிசிப்பிரியா அவவுக்கும் படத்தயாரிப்புக்கும்
எந்த சம்பந்தமோ அதிகாரமோ இல்லை, அதுபற்றிய கருத்து தெரிவிக்கும் அதிகாரத்தையும் நாங்கள் கொடுக்கவில்லை

அவர் இந்த படத்தில் பணிபுரிவதற்கு மட்டும்தான்
கொடுப்பனவு அடிப்படையில் பேசி எடுக்கப்பட்ட நடிகை. அவ்வளவு தான்.

பாவம் அவரிடம் படத்தயாரிப்பு பற்றி கேட்டு டோச்சர் பண்ணாதங்கோ. எங்கள் தயாரிப்பை பொறுத்த மட்டில் அவா just ஒரு நடிகைமட்டும் தான். அத்தோடு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து உதவியிருக்கிறார். அவ்வளவு தான்,
படம் சம்பந்தமான எந்த அதிகாரமும் அவரிற்க்கு இல்லை. அவ ஒரு குடும்ப பொம்பிளை.

திரைப்படம் சம்பந்தமான விமர்சனங்களையும் கழுவிஊத்தல்களையும் , நீலப்பேச்சுக்களையும்
யார் வேணுமென்டாலும் பண்ணலாம்.

தர்சிப்ரியா… நான் எல்லாருக்கும் சொல்லியாச்சு
உனக்கும் தயாரிப்புகளுக்கும் சம்பந்தில்லையெண்டு.
சும்மா கூச்சல் போடாத

நீயே பாவம் உன்ர தம்பி தங்கச்சியளின்ர சிரழிவுகளை
பாத்து திருத்த ஏலாம இருக்கிறாய்
நீ ஏனம்மா பூர்விகாவையே பூந்து பூந்து பாக்கிறாய்
உன்ர சீரழிவிகள பாரனம்மா

நாங்க எங்கட எங்கட பிரச்சனைகள எதிர்கொள்ளுவம்

சண்டையள பிடிக்கலாம் ஆனா
படத்தில ஆர வைக்கிறது தூக்கிறது எண்டு நாங்க (கம்பனி + இயக்குனர் ) முடிவு செய்றம்

படத்த வந்து பாருங்க எங்கள நல்லா விமர்சியுங்கோ திட்டுங்கோ

இயக்குனர்
ஈழவாணி

❤️❤️❤️❤️❤️❤️❤️

இவ்வாறு தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

தர்ஷி பிரியா இது தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்

எது எப்படியோ இதுபோன்ற சர்ச்சைகள் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பையும் அதே நேரத்தில் பிரமோஷன்யையும் தருகிறது .

எது எப்படியோ இதுபோன்ற சர்ச்சைகள் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பையும் அதே நேரத்தில் பிரமோஷன்யையும் தருகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!