புதிய தயாரிப்பாளர் ஜனகனை சந்திக்க பெயரை பதிய காத்திருக்கும் இயக்குனர்கள்
இலங்கை தமிழ் சினிமா என்பது பலருக்கு கனவு , சிலருக்கு உணவு இன்னும் சிலருக்கு உணர்வு .
காரணம் படைப்புகளுக்கு நல்ல தயாரிப்பாளர் ஒருவர் இல்லாமையே . சில இயக்குனர்கள் அண்மைக்காலங்களில் பல ரசிகர்களிடம் பணம் திரட்டி படத்தை வெளியிட்டதை நாம் அறிவோம் .
இந்த சுமைகளை ஒரு முற்று புள்ளியாக தொழிலதிபர் ஜனகன் விநாயகமூர்த்தி ஈழவாணியின் லூசி படத்தை தயாரிக்க முன்வந்தார் . மிக பெரிய பாராட்டக்குறிய விடயம் .
இது தொடர்பாக லூஷி பட இணை தயாரிப்பாளர் ஜனகன் தனது முகப்புத்தக பக்கத்தில் இட்ட பதிவு இதோ .
ஈழவாணியின் இயக்கத்தில் பூவரசி வெளியீடாக வெளிவந்துள்ள “லூஸி” திரைப்படம் இன்று (24/06/2023) சனிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தை ரொக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. ஒரு நேர்த்தியான முழுநேரப்படமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், உண்மையில் இந்திய படங்களுக்கு இணையான திரைப்பட தொழில்நுட்பங்களை உள்ளடங்கியிருந்தது. இத் திரைப்படத்தில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எமது வாழ்த்துக்கள். இதனை தயாரிப்பதில் எமது பங்கு அமைந்திருந்தது என்பது மனத்திருப்பதியை ஏற்படுத்தியது.
இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார் . எமது இயக்குனர்களிடம் தரமான படைப்புகள் இருக்கிறது .
ஆனால் அதற்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை . தயாரிப்பாளர் ஜனகன் அந்த அங்கீகாரத்தை கொடுத்து நமது படைப்பாளிகளை ஊக்குவிப்பார் என்பது உறுதி .
தொழிலதிபர் ஜனகன் அவர்களுக்கு நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.