தடைகளை தகர்த்தெறிந்து தடம் பதித்த | ஈழத்தின் சாதனை பெண் டிவினியா

தடைகளை தகர்த்தெறிந்து தடம் பதித்த
ஈழத்தின் சாதனை பெண் டிவினியா

Tube தமிழ் இந்த ஊடக வலையமைப்பை கேள்விபடாதவர்கள் யாரும் இருக்க முடியாது .

காரணம் இந்த ஊடகத்தின் இலங்கை பொறுப்பாளராக ஒரு பெண் இருப்பதும் , அந்த ஒரு காரணத்திற்க்காக எப்படியாவது இந்த ஊடகத்தை முடக்க வேண்டும் என்றும் பலர் இருந்தனர் .

2021 ஆம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்து பின்னர் விடுவிக்கப்பட்ட டிவினியா தான் Tube தமிழ் ஊடகத்தின் இலங்கை பொறுப்பாளராக இருக்கிறார் .

பல தடைகள் இவரை சூழ்ந்து சூறாவளி போல் அடித்தாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எழுந்து துணிச்சலாக நின்று இன்று யாழ் மண்ணில் Tube தமிழ் கலையகம் ஒன்று உருவாவதற்கு கடுமையாக உழைத்துள்ளார் .

இவரை போன்ற பெண்கள் தான் நம் நாட்டுக்கும் , ஓரம் கட்டி வைக்க பலராலும் முயற்சி செய்யும் எம் இனத்தையும் தலை நிமிர்ந்து நிற்க வைக்க முடியும் .

இங்கே டிவினியா போன்ற பலர் இருந்தாலும் அவர்களது திறமைகள் அடுப்படியிலும் , கிணற்றடியிலும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

டிவினியாவின் ஊடக ஆளுமையை பாராட்டி அவருக்கு ஈழத்தின் சாதனை பெண் எனும் பட்டத்தை வழங்கி கெளரவிப்பதில் Lankatakies பெருமையடைகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!