தொலைக்காட்சி தரப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது.
காரணம் அந்த தரப்படுத்தலில் மூலமே குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் வழங்கப்படுகிறது .
இருப்பினும் சில மிக்கியமான தொலைக்காட்சி நிலையங்கள் தங்களை தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் தக்கவைத்து கொள்ள பெருமளவில் லஞ்சம் வழங்குவதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெலபிட்டிய தெரிவித்துள்ளதாக சிங்கள சமூக வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெலபிட்டிய தெரிவித்ததாக இந்த பதிவு இவ்வாறு தொடர்கிறது .
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட 400 தொலைக்காட்சி பெட்டிகளுக்கு பிரத்தியேகமாக பொருத்தப்பட்ட உபகரணம் ஒன்றின் மூலமே தரப்படுத்தல் பெறப்படுகிறது . குறிப்பிட்ட 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் தரப்படுத்தல் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அதில் உபகரணம் பொருத்தப்பட்ட 300 தொலைக்காட்சி பெட்டிகளை கொள்வனவு செய்துள்ளார்கள் . இதனால் Rating என்று கூறப்படும் தரப்படுத்தல் தரவுகள் பிழையானது .
இவ்வாறு சிங்கள பதிவில் கூறப்பட்டுள்ளது . யாரிடம் போய் சொல்வது இந்த கொடுமையை