சாம் சூசைட் பண்ணப் போறான் இனி சாகாது சினிமா

சாம் சூசைட் பண்ணப் போறான்

இன்று பலராலும் பேசப்படும் ஒரு படைப்பாக சாம் சூசைட் பண்ணப் போறான் மாறியுள்ளது

இந்த படம் தொடர்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் A R வி லோஷன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்

20 நிமிட total entertainment.
இரண்டு நாட்களாக என் timeline எங்கும் இது தான் trending.
அதற்கு தனியே எம்மவர் குறும்படம் என்ற காரணம் மட்டுமில்லை, இயல்பு, எளிமை, இதுவரை காலமும் திரையில் பார்த்திராத எம்மூர்ப் பேச்சு வழக்கு, குறைகள் அவதானிக்க முடியாத நிறைவான ஒரு படைப்பு என்று பல நியாயமான காரணங்கள்.

ஈழத்துக் குறும்படங்கள் என்றால் இதுவரை காலமும் இரண்டு extreme தான்.
ஒன்று படு சீரியஸ் & விருதுக்கான கலைத்துவப் படைப்புக்கள்
அடுத்தது மசாலா – மரண மொக்கைகள்
ஆனால் சா.சூ.ப.போ வேறு ரகம். இது தான் இப்படி முதல் தடவை என்றில்லை, ஆனால் நேர்த்தியில் இப்படியானவை அரிது.

ஃபேஸ்புக்கில் தனக்கென்று சுவையான அடையாளத்தோடு இருந்து காணாமல் போயிருந்த ஜீவதர்சனை ஒரு தரமான படைப்பாளியாகக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்தக் குறும்பட உருவாக்கத்தில் படக்குழு எவ்வளவு மினக்கெட்டிருந்தார்கள், ஒவ்வொரு சிறு விடயத்திலும் நுணுக்கமாகக் கையாண்டிருந்தார்கள் என்று சிலர் எழுதியிருந்தனர்.
ஆச்சரியமில்லை.
அந்த உழைப்பும் நேர்த்தியும் தெரிகிறது.

ஒளிப்பதிவு தான் கதாநாயகன்.
Drone & சைக்கிளோட்ட ஒளிப்பதிவு அசத்தல்.
மலையாளத் திரைப்படங்களின் ரசிகரான நானும் மனைவியும் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு – இயல்போடு ரசனை வெளிப்பாட்டையும் எம் நாட்டின் இயற்கைச் சூழலில் எடுத்தால் அவை தான் நிச்சயம் மலையாளப் படங்களுக்குச் சவாலாக இருக்குமென்று. அது இதுபோன்ற feel good அல்லது போரியல், வாழ்வியல் என்று எந்த வகையாகவும் இருக்கலாம்.

இந்தக் குறுந்திரைப்படத்தின் அந்த முதற்காட்சியே ஆகாயமார்க்கமாக “பாசையூர்” என்று விரிகின்றபோது அப்படியே ஒட்டிக்கொண்டோம்.

அதன் பின் ஊர்ப்பேச்சு வழக்கும் நடிப்பென்றே சொல்லமுடியாத உரையாடல்களும் முடியும்வரை சிறப்பு.
நடிகர் தேர்வு, உறுத்தாத பின்னணி இசை, படத் தொகுப்பு என்று அத்தனையும் அசத்தல்.
நடிகர்களில் சாமின் நண்பர்களில் பிரதானமானவராக வருபவரும், கண்ணாடி போட்ட சைக்கிளோட்டியும் 👌🏻👏🏻
சாமாக நடித்திருக்கும் ஹீரோவிடம் ஒரு இயல்பான நாயகத்தனம் இருக்கிறது.
வாழ்த்துகள் தம்பிமார்.

இப்போதெல்லாம் Facebook statusஇலேயே twist ஐ எதிர்பார்க்கும் காலம் என்பதை Facebook இல் தேசிக்காய் மகிமை, பிளைட் ஓட்டிய தமிழன் என்று அதகளப்படுத்திய இயக்குனர் உணர்ந்து சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்.

பார்த்தவர்களின் பாராட்டுக்களே விளம்பரமாகியிருக்கிறது.
Attempt has been successful.
தொடரவும். கலக்கவும்

இதுவரை பார்க்காதோருக்காக குறும்பட இணைப்பு : https://youtu.be/DDogI_QN1CU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!