மலையகத்தின் தனித்துவ குரலாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இணைய செய்தி தளம் மலையகம்
நிகழ்ச்சி தொகுப்பாளர் துரைசாமி தேவராஜ் இவருடைய ஒவ்வொரு நிகழ்வுகளின் தொகுப்புகளையும் நாங்கள் பார்க்கும் பொழுது உண்மையை பெருமிதம் அடைகின்றோம்.
அந்த நிகழ்வுகளை எல்லாம் மிக சிறப்பாக தொகுத்து வழங்கக்கூடிய ஒரு சிறந்த தொகுப்பாளராக காணப்படுகின்றார்.
மலையகத்தில் நோட்டன் பிரிட்ஜ் என்ற இடத்தை இவர் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் அவ்வப்போது ஆலய நிகழ்வுகள் விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என அத்தனை நிகழ்வுகளையும் திறம்பட செய்யக் கூடிய ஒரு தொகுப்பாளராக காணப்படுகின்றார்.
மலையகத்தின் தனித்துவ குரலாக இன்று உலக முழுவதும் பார்க்கக்கூடிய சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசக்கூடிய ஒரு தளமாகவும் காணப்படுகின்றது .
இதனூடான இவருடைய திறமையானது இன்று மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய ஊடகத்தில் இருக்கின்றவர்களும் பாராட்டக்கூடிய வகைகளில் இவருடைய ஒவ்வொரு தொகுப்புகளும் சிறந்த முறையில் காணப்படுகின்றது .
இவர் ஊடகத்துறை மாத்திரம் அல்லாமல் சமூகப் பொறுப்புள்ள ஒருவராகவும் சமூக சேவைகளை செய்யக்கூடிய ஒருவராகவும் காணப்படுகிறது .
இவரின் திறமைகள் இன்னும் மிகப்பெரிய அளவில் வெளிப்பட வேண்டும் அதற்கு அனைவருக்கும் பொதுவான இறைவனை நாங்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.