பாடலாசிரியர்களில் பரவலாக பெயர்கள் அடிபட்டாலும் பெண் பாடலாசிரியர் டினுஷா காயத்திரியை கூறாமல் இருக்க முடியாது .
சமீபத்தில் அவர் கை வண்ணத்தில் தொடுவானம் பாடல் அனைவரது பாராட்டையும் பெற்ற பாடலாக அமைந்து விட்டது .
பாடலாசிரியர் S.டினுஷா காயத்திரியின் ஆழமான வரிகளில் மற்றும் ஒருங்கிணைப்பிலும் ஆரோக்கியமான சமுதாயம் மிகவும் பெருமையுடன் வழங்கும் “தொடுவானம்” பாடலானது சக்தி தொலைக்காட்சியில் நடைப்பெறும் “Shakthi Chat” நிகழ்ச்சியின் மூலமாக பிரத்தியேக வெளீயிடு மிக இனிதாக நடைபெற்று முடிந்தது.
தற்போது காணப்படும் சமுதாய சூழ்நிலைகளை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் விழிப்புணர்வுக்கான இப் பாடல் ஒரு தரமான படைப்பாகவே உருவாகி இருக்கின்றது என்றே சொல்லலாம்..
பொருளால் நிறைந்த பூமிதன்னைப்
பொட்டல் காடாக மாற்றுகிறான்..
தினமும் பச்சை ரத்தத்தினை
அட்டைப்பூச்சி போல் உறிஞ்சுகிறான்..
வறுமையே வாழ்க்கையாய்
வாழனும்னு நினைக்கிறான்..
உணர்வுகளை ஒடுக்கி விட்டு
உத்தமன் போல் நடிக்கிறான்..
ஆட்சி மாறினாலும்
காட்சி மாறுதில்ல..
ஆளும் வர்க்கம் கூட
பட்டினிய ஒழிக்குதில்ல..