உனைச்சேரவே பாடல்
ஜெராட் மாவீரனாகவே

நமது நாட்டின் பெருமைகூறிய நடிகர்களில் ஜெராட்க்கு முக்கியமான இடம் கொடுக்க வேண்டும் .

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாகவும் அனைவரும் பாராட்டும் விதம் நடிப்பார் .

அவரது நடிப்பில் வெளிவந்துள்ள உனைச்சேரவே பாடலில் அவர் தோன்றும் காட்சிகள் ஒரு மாவீரனை எம் கண் முன் நிறுத்துகிறது .


HM Brothers Car Sales நிறுவனத்தால் யாழ்ப்பாணம் Tilko Hotal இல் நடத்தப்பட்ட இசை நிகழ்வின் உன்னைசேரவே… எனும்வீடியோ பாடல் மிகவும் சிறப்பாக
தென்னிந்திய நடிகர் ரோபோசங்கர், பாடகர் அஜய் கிருஷ்ணா அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது


அஜித்சுவேந்திராவின் AJS Entertainment தயாரிப்பில் T.வினோத்தின் இயக்கத்தில்
VM film makers படக்குழுவினர்களால் உருவாக்கப்பட்ட
“யாரோ அது யாரோ தொலைவினில் குரல் கேட்குதே…” என்ற பாடல் வரிகளை லதீப் பாலசுப்பிரமணியன் எழுதியுள்ளதுடன். வெற்றி சிந்துஜன் இசையமைத்து பாடியுள்ளார் அவருடன் இணைந்து மதுஸ்ரீ ஆதித்தனும் இனிமையான குரலால் சிறப்பாக பாடியுள்ளார்.

இப்பாடலுக்கு எந்த பாத்திரத்தையும் கொடுத்தால் இயல்பாக ஏற்று சிறப்பாக நடிக்கும் நம் நாட்டின் இளம் பிரபல நடிகரான ஜெறாட்நோயல் நடித்ததுடன் அவரோடு நடிகை மான்விழியும் இணைந்து நடித்து வலுசேர்த்துள்ளனர்.


விதுசன், மற்றும் யானுசனின் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் டேறியன் ஒப்பனை மற்றும் கலை இயக்குனராக செயலாற்றியதுடன் சுவிகரன் மற்றும் ரகீதன் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.


ஹம்சாயினியின் உடைவடிவமைப்பை மிகவும் சிறப்பாக மேற்கொண்டிருந்த இக் காணொளிப்பாடல் காதலர் தினம் (14 -02 -2023) அன்று மாலை வெளியிடப்பட்டது.

நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!