நடைபெற விருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் ஊடகங்களில் ஒரு பகுதியாகவிருந்து அவர்களது சொந்த பகுதியில் களம் இறங்கும் எமது படைப்பாளிகளுக்காக இலங்கை கலைஞ்சர்களில் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு இணையத்தளமான இன் பக்கத்தில் பதிவிட்டு அவர்களை உற்சாகப்படுத்தவுள்ளோம். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. எந்த பிரதேச பேதமும் கிடையாது .இது முற்றுமுழுதாக எமது படைப்பாளிகளின் வெற்றியை உறுதி செய்யவே இந்த முயற்சி என்பதை அனைவருக்கும் அறிய தருகின்றோம் .
சூரியன் லங்கேஷ் என்ற ஒரு பெயரை தெரியாதவர்கள் மலையகத்தில் இருக்க வாய்ப்பில்லை .
பல தடைகளை கடந்த ஒரு மீடியா காரன் என்றால் அது நம்ம லங்கேஷ் அவர்களை சொல்லலாம் .
சரி விஷயத்திற்கு வருவோம் . எதிர்வரும் தேர்தலில் டயகம பகுதியில் போட்டியிடுகிறார் .
ஐக்கிய தேசிய கூட்டமைப்பில் தராசு சின்னத்தில் தான் போட்டி .
இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பல விமர்சனங்கள் வர தான் செய்கிறது . இருப்பினும் டயகம மண்ணில் இருந்து காற்றலையில் ஒலித்த முதல் குரல் ,
அந்த பகுதி மக்களுக்காக ஓடி ஓடி உழைக்கும் ஆர்வமும் , துணிவும் உள்ள மக்கள் நண்பன் .
இவரை ஏன் உங்கள் பகுதிக்கு தெரிவு செய்ய கூடாது ?.
முகப்புத்தகத்தில் அவர் இட்ட ஒரு பதிவு எம்மை மிகவும் கவர்ந்தது .தான் வெற்றி பெறுவதை போல் சக நண்பர்களும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனது தான் சார் கடவுள் .
என்னுடைய மண்ணிலிருந்து ஒரு ஈ எறும்பு கூட தேர்தலில் போட்டி போட்டு வெற்றி பெற்றால் முதலில் சந்தோஷப்படுபவன் நான் தான்
காரணம் அது என் மண் நான் பிறந்து வளர்ந்த மண் நான் படித்தவன் நான் ஓடி திரிந்தவன் அங்கிருந்து யார் வந்தாலும் அனைவருமே என்னுடைய சகோதர சகோதரிகளே
அது எந்த கட்சியாகவும் இருக்கலாம் அது எந்த ஒரு இனமாகவும் இருக்கலாம் என்ன ஒரு மதமாகவும் இருக்கலாம் என்ன ஒரு மொழியாகவும் இருக்கலாம் இது மட்டுமே என்னுடைய சிந்தனை என்னுடைய ஊருக்கு நல்லது நடந்தால் அது எனக்கு நடந்தது மாதிரி
சின்ன வயதில் dayagama வைத்தியசாலை திறந்து வைக்கும் போது கைதட்டி சந்தோஷப்பட்டவர்கள் நாங்கள் அப்படி ஒரு சந்தோஷம் காரணம் எங்களுக்கு ஒரு வைத்தியசாலை கிடைத்துவிட்டது என்று பின்பு அந்த வைத்தியசாலை அதிகமாக முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும்போது அதிக வேதனைப்பட்டதும் நாங்கள் தான்
சின்ன வயதில் இருந்து Dayagama மண்ணில் ஓடிய கஷ்டப்பட்ட எங்களுக்கு தெரியும் அந்த ஊரின் உடைய தனித்துவமும் என் தந்தை 55 வருடங்கள் Dayagama தோட்டங்களில் ஏறி இறங்கியவர் வியர்வை சிந்தி வரும்போது எனக்கு தெரியும் அதன் வலிகளும் வேதனை
அத்தனை வேதனை வலிகளை சுமந்து கொண்டே Dayagama டவுன் பாடசாலை நட்போன் பாடசாலை இப்படி தோட்டப்புற பாடசாலைகளில் படித்து வளர்ந்தவன் நான்
பேருந்துகள் இல்லாமல் Dayagama டவுனில் இருந்து Natborn வரையும் ஈஸ்ட் வரையும் நடந்து திரிந்த கால்கள் என்னுடையது என் பாடசாலை நண்பர்களுடையது
ஒரு நேர உணவுக்கு கூட கையேந்தாமல் கஷ்டப்பட்டவர்கள் நாங்க இன்று பலரும் அந்த பகுதியில் தேர்தலில் நிற்கலாம் கேட்கலாம் எல்லாமே என்னுடைய சகோதரர்கள் என்னுடைய நண்பர்கள் அவர்கள் வெற்றி பெற்றாலும் முதலில் சந்தோஷப்படுவான் நான் மட்டுமே எனக்கு போட்டியோ பொறாமையோ வெட்டி பந்தாவோ எதுவுமே இருந்ததில்லை
என் Dayagama மண்ணில் நான் வந்து ரோட்டும் போட்டாலும் நான் வந்து ஊருக்கு நீரும் வாங்கி கொடுத்தாலும் அல்லது என் நண்பர்கள் வந்து ஜெயித்தாலும் அவர்கள் வந்து எது செய்தாலும் அதை அனுபவிக்க போறது என் நண்பர்களும் நாங்களும் நானும் என் ஊரும் தான் அதனால் எனக்கு எப்போதுமே ஊரிலிருந்து எந்த நண்பர் முன்னுக்கு வந்தாலும் தட்டிக் கொடுக்கும் முதல் மனிதன் நான் தான்
இன்று நீங்கள் இப்படி எல்லாம் பேசலாம் அன்று நாங்கள் வழிகள் சுமந்தது எங்களுக்கு தான் தெரியும்
கரடு முரடான பாதையில் என் தாய் என் சகோதரி பிரசவங்களை சுமந்த வழிகள் தலையில் மூட்டையை தூக்கிக்கொண்டு அந்த பாதையில் நடந்து தொங்கத் தோட்டத்தை வரை சென்ற அந்த பொழுதுகள் அனைத்துமே நான் அறிந்தவன்
இன்று விமர்சிக்கும் உங்களுக்கு அந்த ஆரம்ப வழிகள் வேதனைகள் தெரிந்திருக்காது இப்போது எனது ஊரில் எல்லாமே இலகுவாக கிடைக்கிறது ஆனால் அப்போது எங்களுக்கு எதுவுமே கிடைத்ததில்லை
இன்று வரை என்னுடைய காணி பிரச்சினைக்கு கூட யாருமே முன்வந்து உதவி செய்யவில்லை இப்படி எத்தனையோ நண்பர்களுடைய காணிகள் இதைப்பற்றி நாங்கள் பேசாமல் யார் பேசுவது
அடுத்தவர்களை விமர்சிப்பதற்கு முன்பு நாம் நாம் தகுதியானவர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அதன்பின்பே விமர்சிக்க வேண்டும்
இன்று தேர்தலில் போட்டியிடும் Dayagama சேர்ந்த என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தேர்தலில் வெற்றி பெற நம் நாட்டின் கலைஞர்களின் திறமைளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துகள்.