- மூதூர் சூரியன் றிமசாத் – குட்டி தேர்தல் – பெட்டிக்குள்ள யாரு ?
நடைபெற விருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் ஊடகங்களில் ஒரு பகுதியாகவிருந்து அவர்களது சொந்த பகுதியில் களம் இறங்கும் எமது படைப்பாளிகளுக்காக இலங்கை கலைஞ்சர்களில் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு இணையத்தளமான இன் பக்கத்தில் பதிவிட்டு அவர்களை உற்சாகப்படுத்தவுள்ளோம். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. எந்த பிரதேச பேதமும் கிடையாது .இது முற்றுமுழுதாக எமது படைப்பாளிகளின் வெற்றியை உறுதி செய்யவே இந்த முயற்சி என்பதை அனைவருக்கும் அறிய தருகின்றோம் .
சூரியன் றிமசாத் என்ற ஒரு பெயரை தெரியாதவர்கள் கிழக்கில் இருக்க வாய்ப்பில்லை .
பல தடைகளை கடந்த ஒரு மீடியா காரன் என்றால் அது நம்ம ரிம்ஸாத்தை அவர்களை சொல்லலாம் .
எதிரவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 இல் மூதூர் பிரதேச சபை – ஜாயா வட்டாரம்
தேசிய காங்கிரஸ் இல் போட்டியிடுகிறார் .
ஏன் நாம் ஊடகத்துறை சார்ந்த ஒருவரை பிரதேச அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்க கூடாது .
இது நல்ல ஒரு சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது .ரிம்ஸாத் போன்ற திறமையுள்ள ஒருவரை நியமிப்போம் .
றிமசாத் வெற்றி பெற நம் நாட்டின் கலைஞர்களின் திறமைளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துகள்