டான் டிவியின் சுலக்ஷன் பலரும் அறிந்த தேசிய விருது பெற்ற ஊடகவியலாளர் .
அவரது அரசியல் நிகழ்ச்சிக்கு பலர் அவரது ரசிகர்களாக மாறி இருக்கிறார்கள் .
அவரது அரசியல் நேர்காணல் நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்களை அவர் வறுத்தெடுக்கும் கேள்விகள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வைக்கும் .
இந் நிலையில் அவர் அகில இலங்கை கம்பன் கழக தலைவர இ.ஜெயராஜ் அவர்களை சந்தித்தார் .
என்ன பேசியிருப்பார்கள்? அடுத்த நிகழ்ச்சியில் யார் யாரிடம் என்ன என்ன கேட்க வேண்டும் என்பதே அதிகமாக பேசி இருப்பார்கள்
எது எப்படியோ சந்திப்பு தொடர்பாக சுலக்ஷன் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் .
அகில இலங்கை கம்பன் கழக தலைவர இ.ஜெயராஜ் ஐயாவின் அன்பான அழைப்பில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எனது அரசியல் நிகழ்ச்சிகளின் இரசிகர்களில் ஒருவராக உலகறிந்த பேச்சாளர் ஒருவரையும் பெற்றுளேன் என்று இந்த சந்திப்பில் உணர்ந்தேன்.
ஒன்றரை மணிநேரம் எனக்காக அவரின் நேரத்தை ஒதுக்கி அரசியல் உட்பட அறிவுரை கலந்த ஆலோசனைகளையும் பெற்றேன்
இத்தனைக்கும் என்னை தகுதியானவனாக உருவாக்கிகொண்டிருக்கும் எனது நிறுவனத்தலைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து பல சந்திப்புகள் தொடர நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.