பொதுவாகவே புலப்பெயர் நாடுகளில் இருந்து வெளிவரும் படைப்புகளுக்கு இலங்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை .
இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் ஒரு வித மன கசப்பாக கூட இருக்கலாம் .
அவர்களிடம் பணம் கொட்டி கிடைப்பதால் அவர்கள் படம் எடுப்பார்கள் என்ற சிந்தனையே புலம் பெயர் நாட்டின் படைப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பது மிக குறைவு .
ஆனால் இது மிக பெரிய தவறான சிந்தனை . பணம் இருந்தால் எல்லோரும் படம் எடுக்க முடியுமா என்ன?
அதற்கு ஒரு திறமை வேண்டும் .அதுவும் செய்யும் தொழிலை விட்டு நேரம் ஒதுக்க வேண்டும் .இவ்வளவு கஷ்டப்பட்டு வெளிவரும் படைப்பை உலக தமிழர்கள் பாராட்டும் மன நிலை உருவாக வேண்டும் .
இப்படி ஒரு படைப்பு வெளியாகி அதில் இரண்டாம் பாகமும் வெளிவருகிறது என்றால் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம்
கடந்த 2019ஆம் ஆண்டு கனடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளிவந்த “ஒருத்தி” திரைப்படம் ஒன்பது நாடுகளில் வெளியிடப்பட்டு பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற ஒரு திரைப்படம்.
அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே கலைஞர்கள் “ஒருத்தி-2” பாகம் 2 கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவந்திருக்கிறது.
Torontoவில் இரண்டு காட்சிகளை நிறைவுசெய்து Montreal நகரில் திரையிடப்பட்டு இப்பொழுது மீண்டும் Scarboroughவில் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி பிற்பகல் காண்பிக்கப்படுகிறது.
2023 புதிய வருடத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளில் “ஒருத்தி-2” காண்பிக்கப்பட உள்ளது.
இந்த படம் பல வெற்றிகளை தொடர நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.