மௌன மொழி இலங்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படம்
சனாதனனின் இயக்கத்தில் ரவீந்திரன் தயாரிப்பில் வினோத்ரோன் ஒளிவண்ணத்தில் தீப்திகா, ஜனா ரவி, கவிநாத், கலை ரியா, பிரிய தர்ஷினி, கேதீஸ், பிரகேஷ், இஷாலினி ஆகியோர் நடிப்பில் அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள மௌன மொழி திரைப்படம் 2023இல் திரைக்கு வர இருக்கிறது.
இது நிச்சயமாக மிகப்பெரிய ஒரு முயற்சி. அதை நிதர்சனமாக்க படக்குழுவினர் அணி கடுமையாக உழைக்கும் என படத்தின் இயக்குனர் சனா தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் இணைந்தால் மாத்திரமே இதை சாத்தியமாக்கலாம். அந்த நம்பிக்கையில் களம் இறங்குகின்றோம் என்றும் கூறியுள்ளார் .
படக்குழுவினருக்கு நம் நாட்டின் கலைஞர்களுக்கான ஒரே ஒரு இணையத்தளமான லங்காடாக்கீஸின் www.Lankatalkies.lk இனிய வாழ்த்துக்கள்.