வானொலிகளை தற்போது கேட்பது மிகவும் குறைந்து வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது .
அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையில்லை என்று நீங்கள் சொல்வது எமக்கு கேட்கிறது .
அது இருக்கட்டும் முன்பெல்லம் வானொலி நிலையங்களுக்கு இடையில் நிகழ்ச்சி தொடர்பாக கடும் போட்டி இருக்கும் .
ஒரு வானொலி ஒரு புதிய நிகழ்ச்சியை ஒலிபரப்பிவிட்டால் உடனே அடுத்த வானொலி அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்புவார்கள் .
ஆனால் இப்போது நிலை மாறிவிட்டது . ஒரு வானொலி சமூக வலைத்தளத்தில் ஒரு வீடீயோ போட்டால் அதற்கு நிகராக அடுத்த வானொலி ஒரு வீடியோ செய்து போடுகிறார்கள் .
இந்த போட்டிக்கான காரணம் என்னவென்றால் மேலிடத்தில் இருந்து அழுத்தம் . குறிப்பாக இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் வானொலிகள் சகோதர சிங்கள மொழியிலான நிர்வாக இயக்குனருக்கு கீழ் தான் இயங்குகிறது .
ஆகவே அவர்கள் தமிழ் வானொலி கேட்பதில்லை .மாறாக சமூக வலைத்தள வீடியோக்களை பார்த்துவிட்டு தங்களது வானொலி குழுவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் .
அதாவது பாருங்கள் அவர்கள் எப்படி செய்கிறார்கள் …….நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்று …
இப்ப புரியுதா …….எல்லா வீடியோ பதிவுக்கு பின்னால் பெரிய கதை உண்டு நண்பா