வானொலியில் பெல்ட் என்றால் என்ன என்று பலருக்கு தெரியாது.
முன்பு ஒலி நாடா தொடங்கி படச் சுருள் வரை பெல்டில் தான் ஓடும்.
அதே போன்று தான் வானொலியும் . நிகழ்ச்சிகள் Belt போன்று ஓட வேண்டும்.
அதில் எல்லாமே நல்ல பெல்ட் என்றாலும் சில பெல்ட்கள் மட்டுமே நேயர்கள் அதிகமாக கேட்கும் பெல்ட்கள்.
அப்படி ஒரு நல்ல பெல்டில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்றால் என்ன செய்யலாம்.
முக்கியமான ஒரு தமிழ் வானொலியில் நல்ல பெல்ட் ஒன்று கேட்ட RJ க்கு நடந்த சம்பவத்தை எம்மிடம் கூறினார்.
அலைவரிசை பிரதானி அண்ணா கொஞ்சம் வழியும் பார்டியாம்.
பொண்ணுங்க வந்து நல்ல பெல்ட் கேட்டா உடனே மாத்தி கொடுப்பாரு. அதே நாங்க போய் கேட்டா…..நான் Office ல இல்லாத நேரம் என்னவெல்லாம் நடக்குது என்று கேட்பார்.
அதை சொன்னாலும் உடனே மாத்தி தர மாட்டாராம்.யோசித்து செல்வதாக சொல்லி சுத்தலில் விடுவாராம்.
இன்னும் எத்தனை காலத்திற்கு தான்டா இப்படி சென்ஞிக்கிட்டு இருக்க போறீங்க.
உங்களமாதிரி அலைவரிசை பிரதானிகள் இருக்கும் வரை கனவுகளுடன் வரும் புதிய வானொலி அறிவிப்பாளர்கள் வெறும் பிரேதம் தான்டா.