பாடல்கள் வீடியோ வடிவில் வருவதும்,அவற்றை தயாரிப்பதும் சாதாரண விடயமல்ல.
தற்போதைய சூழ்நிலையில் மிக கடினமான விடயம்.
அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் எமது புலம்பெயர் சமூகத்தில் இருந்து படைப்புகள் வெளிவருவது பாராட்டதக்கது.
நந்தா ஸ்ரீஸ்கந்தராசா. இலங்கையை சேர்ந்தவர்.
கடந்த பத்து வருடங்களாக புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார்.
தாய்நாட்டில் இசை பயின்று இசை விரிவுரையாளராக பணியாற்றிய நந்தா புலம்பெயர்ந்து மனதிற்கு நெருக்கமில்லாத வேறு தொழில்களை செய்து வந்தாலும், நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஓர் சுயாதீன இசைக் கலைஞனாக இயங்கி வருகிறார்.
மிக அண்மையில் அவரது “தீம்பாவை” என்ற பெயரில் இரண்டாவது இசை பாடலை முடித்து YouTube வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பாடல் ஆகஸ்ட் 16 அன்று வெளியிடப்பட்டது.
பாடல் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் படைப்பு நன்றாக உள்ளதாகவே கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்,
அண்மையில் இலங்கை ரூபவாஹினி கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ் பிரிவான நேத்ரா அலைவரிசையில் தாமாக முன்வந்து பாடலை ஒளிபரப்பு செய்திருந்தார்கள்.
பாடல் மிக அருமையாக வெளிவந்துள்ளது.
பாடல் – தீம்பாவை
இசை, தயாரிப்பு – நந்தா ஸ்ரீஸ்கந்தராஜா
பாடியவர்கள் – வந்தனா ஸ்ரீனிவாசன் (பின்னணி பாடகி) மற்றும் நந்தா ஸ்ரீஸ்கந்தராஜா
பாடல் வரிகள் – நந்தா ஸ்ரீஸ்கந்தராஜா
இறுதி இசைக்கலவை – ரபேல் ஜோனின்
எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுதாகர்
ஒளிப்பதிவு மற்றும் கலர் கலவை – பிரகதேஷ் பி
படத்தொகுப்பு – சாம்
மேலதிக கலர் கலவை – தனுஷ்
துணை இயக்குனர் – நந்தா குமார்
இணை இயக்குனர் – விநாயக் வி
பாடல் குழுவுக்கு எமது வாழ்த்துகள்.