தனது சிறந்த ஊடக ஆளுமையால் பலரையும் கவர்ந்தவர் பிஷ்ரின் மொஹமட்.
பல திறமைகளை கொண்ட அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார் .
ஏன் ஊடகத்துறையில் இருந்து விலகினீர்கள்? (முழுமையாக விலகிவிடவில்லை எனது பணி ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது) ஏன் வெளிநாடு சென்றீர்கள்? என்று பலர் கேட்டார்கள், கேட்கின்றார்கள்.
சிலரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கின்றேன். ஆனால் 2020 நவம்பர் முதல் நான் பணிபுரிந்த தனியார் தொலைக்காட்சியில் நடந்தவை, ஒரு முன்னாள் அமைச்சரின் கையாளாகாத தனத்தாலும், ஒரு முஸ்லிம் மதகுருவின் பேராசையாலும் பல ஊடக நண்பர்கள் துறையிலிருந்து காணமல் போன கதையை தொடராக எழுதவுள்ளேன்.
இப்போதும் ஊடகத்துறைக்குள் வரவேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு இருக்கின்ற தோழர்களுக்கு எனது கதை ஒரு பாடமாக அமையும் என்பதற்காக இதனை இனி வரும் நாட்களில் நடந்த உண்மையை பதிவிடவுள்ளேன்.