இலங்கை தமிழ் இசை துறை என்றவுடன் நமது நினைவுக்கு வருவது முதலில் இசை குழுக்கள் தான் .
ஒரு காலத்தில் இசை குழுக்கள் என்றால் அப்படிப்பட்ட அபிமானம் .
அந்த இசை குழுக்களில் இருப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார்ஸ் .
அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தான் விஷாரத ரத்னம் ரத்னதுறை . தனது தபலா திறமையில் அனைவரையும் கட்டி போட்டவர் .
சமீபத்தில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சியின் நெஞ்சே எழு நிகழ்ச்சியில் சிரேஷ்ட மூத்த அறிவிப்பாளர் உவைஸ் செரீப் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் .
தான் இதுவரை விருதுகளுக்காக எந்த படைப்பையும் செய்யவில்லை என கூறிய அவர் இசை கலைஞ்சர்கள் மிக குறைவாகவே நமது நாட்டில் முறையாக சங்கீதம் கற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார் .
பல கேள்விகளுக்கு மிகவும் சிறப்பாக பதிலளித்த அவர் எமது கலைத்துறைக்கு கிடைத்த பெரும் அதிஷ்டமே .எமது வாழ்த்துக்கள் .