மதி சுதாவின் புதிய அடையாளம் | மதி Film Factory

நாம் யாவரும் அறிந்த இயக்குனர் மதி சுதா தனது திரைப்பட நிறுவனத்தின் அடையாள சின்னத்தை அறிமுகம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவுசெய்த முகப்புத்தக பதிவு.

Mathi film factory இன் Logo அறிமுகம்.

ஈழத்து திரைப்பரப்பில் இயக்குனர், நடிகர், திரைக்கதையாசிரியர், கதாசிரியர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர் என என்னை அறிந்து கொண்டாலும் இவை எதிலும் நான் இன்னும் வெற்றி பெறவில்லை.
ஆனால் ஈழத்து சினிமாவில் நான் வெற்றியாளனாக மார்தட்டிக் கொள்ளும் ஒரு விடயம் உள்ளது ஆனால் அது பற்றி நானும் அலட்டிக் கொள்வதில்லை.

“தயாரிப்பாளர்”
13 குறும்படங்கள், ஒரு பாடல், 5 ஆவணப்படங்கள், 2 திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகியிருக்கின்றேன்.

என் குறும்படங்களில் போட்ட பணத்திற்கு மேலாக பல மடங்குகள் பணமீட்டப்பட்டிருக்கின்றது. என்ன ஒன்று அதன் தயாரிப்புப் பணம் சிறிய அளவில் இருப்பதால் “அட இது phone படம் தானே” என்ன பெரிய செலவு என கடந்து போய் விடுவார்கள்.
உதாரணத்திற்கு 1500/- க்கு எடுத்த “தர்மா” குறும்படம் 82,000/- ரூபாய்கள் உழைத்தது.

உம்மாண்டி திரைப்படத்தில் மட்டும் பெரிய அடி வாங்கியிருந்தேன்.

சரி இவை எல்லாம் இருக்கட்டும் ஏன் இப்போது இதை எல்லாம் சொல்கின்றேன் என்றால் Mathi film factory என்ற எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு இப்போது தான் Logo ஒன்றை செய்திருக்கின்றேன்.

இப்படத்திற்குரிய மூல மாதிரியை Kiruthiehan Mathiruban இடம் இருந்து பெற்றுக் கொண்டு நான் இட்ட கருத்தியல் வடிவத்தை கர்ணா digital ஆக்கிக் கொடுக்க sri Thusikaran சலனப்படமாக்கிக் கொடுத்தார். அதற்குரிய இசையை siva pathmayan வழங்கினார்.

விரைவில் சலனப்படத்தை பார்வைக்கு வைக்கின்றேன்.

இவரின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!