செட்டிகுள மண்ணின் மாணவி எந்த வித பகுதி நேர வகுப்புகளுக்கும் செல்லாமல் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை படைத்த #ஸ்டேனி #மேரி_விஜித்தா ஆகியோரது புதல்வியான செல்வி #டஸ்னா
வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவி #டஸ்னா வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
இழுப்பைக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வரும் #ஸ்டேனி என்பவரது மகளாகிய #டஸ்னா அவ் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 08 வது இடத்தினை பெற்றுள்ளதுடன் அவரது கிராமத்திற்கும் பெறுமையினை தேடித்தந்துள்ளார்.
செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3ஏ சித்திகளை பெற்ற முதல் மாணவர் இவரே ஆவார்.
இவருக்கு எமது இணையதளத்தின் வாழ்த்துக்கள்.