பக்தி பாடல் வரிகள் என்பது காதல் பாடல்களை போல் மானே தேனே என எழுதி விட முடியாது.
அதற்கேன்ற ஒரு தனி ரசனையே இருக்கிறது.
எந்த கடவுளை பற்றி எழுதுகிறமோ முதலில் அவரை ரசிக்க வேண்டும்.
அவர் அழகை அதிகமாக விரும்பும் ஒரு பக்தரினால் தான் அழகான வரிகளை பக்தி பாடல்களில் கொண்டு வர முடியும்.
டினுஷா காயத்திரி நாம் அறிந்த வகையில் பெண் பாடலாசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டிருக்கும் பெயர்.
டினுஷாவின் அழகிய கைவண்ணத்தில் அந்த அழகான நல்லூர் முருகனுக்கு எழுதிய பாடல் தான் “நலம் தரும் நாயகன்” .
பி.எஸ்.விமல் வழங்கியுள்ள இசை நல்லூர் மஹோற்சவத்தை கண் முன் நிறுத்துகிறது.
டினுஷா காயத்ரியின் வரிகளுக்கு , தபேலா பா.கபிலன் இசைக்கு, S நாதனின் புல்லாங்குழல் இசை தேன் வந்து பாய்கிறது.
Bass கிற்றார் மற்றும் ஒலிக்கலவை எம்.பகி பக்குவமாக கலக்க ,ஒளிப்பதிவை துளிர் பாபு கவனித்துள்ளார்.
ஒளித்தொகுப்பு எ.எஸ்.பிரசாத் கவனிக்க, Trymas media தயாரிக்க இந்த பாடலை சினேகா பாடியுள்ளார்.
இது போன்ற பல பாடல்கள் டினுஷாவின் கைவண்ணத்தில் வர எமது வாழ்த்துக்கள்.