ஸ்ரீ லங்கா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் தற்போது நிலமை மாறி சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ள லங்காடகிஸ் இணையத்திற்கு அவர் வழங்கிய சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறியுளளார்.
இருப்பினும்,கலைதுரையில், கலைஞர்கள் மீள முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து தொழில்களும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கலையுலகம் கவலைக்கிடமாக உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலை காரணமாக எவ்விதமான களியாட்ட நிகழ்வுகளும் நடை பெறாததால் வருமானமின்றி வாழ முடியாத நிலையில் கலைஞர்களும், அவர்களுக்கு குரல் கொடுக்காத அரசிய”நாதி”களும் செயற்படுவதை காண முடிகிறது.
நாட்டு மக்களையும், அரசில்வாதிகளையும் குதூகலப்படுத்தி மகிழ்ச்சியில்
ஆழ்த்திய கலைஞர்களுக்கு அரசு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய முன் வர வேண்டும்.
எனவே, தேர்தல் காத்தில் கலைஞர்களுக்கு பின்னால் அழையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே…
சற்று சிந்தியுங்கள்,,,
தேர்தல் என்பது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
கலைஞர்களை நீங்கள் மறந்து திமிராக செயற்பட்டால் அரசியலில் உங்களுக்கு அஸ்தமனம் தான் என தெரிவித்துள்ளார்.