சூரியன் வானொலி அண்மையில் தனது 24 வது பிறந்தநாளை கொண்டாடியது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் அறிவிப்பாளர்கள் முகப்புத்தகத்தில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
சூரியனின் இந்த மாபெரும் வளர்ச்சியில் அதிக பங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் நடராஜசிவம் அவர்களை சாரும் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.
இருப்பினும் வாழ்த்திய அனைவரும் நடா அண்ணாவை மட்டுமே நினைவு கூர்ந்தார்கள். சூரியனின் ஆரம்ப வளர்ச்சிக்கு அபர்ணா சுதன் என்ற ஒரு வானொலி நட்சத்திரத்தின் குரலும் காரணம் என்பதை பலர் நினைவு கூறவில்லை.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து நாம் பேசினாலும் உண்மை என்ற ஒன்றை நாம் மறைக்க முடியாதல்லவா? –. ஆசிரியர்