இலங்கையில் கலை
ஏதோ குறும்படம் ரெண்டு மூனு எடுத்து. இரண்டு முறை தேசிய விருது வாங்கி, வீட்டு சுமைக்கும் கலைக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் அப்பாவி கலைஞன் என்ற ரீதியில் எழுதிக்கொள்வது.
இந்திய கலைஞர்களை கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டிய கட்டாயம் என்ன? இலங்கை கலைஞர்களை வைத்து ஏன் நிகழ்ச்சி செய்ய முடிவதில்லை என்ற ஒரு நியாயமான கேள்வி நண்பர்கள் மத்தியில் வலம் வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நான் எப்பவும் சொல்றமாதிரி.. “நாங்க இன்னும் அந்தளவுக்கு வளரல்ல ப்ரோ”
அதுக்கு காரணம் நமது மனநிலை
ரெண்டு படம் எடுத்ததும் தான் ஒரு பெரிய இயக்குனர் என்ற மனநிலை
நாலு படம் நடிச்சதும் பெரிய நடிகன் அல்லது மாஸ் நடிகன் என்ற மனநிலை
சிலதுகள் மாசத்துக்கு நாலு போஸ்டர் நாப்பது வர்கிங் ஸ்டில், மேல தேங்கயூ காட் ன்னு கேப்ஷன் வேற ஆனா அவுட் புட் வந்ததே இல்ல.
நாலஞ்சு ஷோர்ட் ப்லிம், ரெண்டு மூனு மியூசிக் வீடியோல நடிச்ச ஹீரோயின்சுக்குள்ள போட்டி, அவங்கட லீக் வீடியோ சர்ச்சைகள் வேற (பெரிய த்ரிஷா)
10 பாட்டு செஞ்சதும் மனசுக்குள்ள உதிக்கிற செலபிரிட்டி பீலிங். ரஹ்மான் ரேஞ்சுக்கு பேட்டி குடுக்குறது.
இந்த மாதிரி பல விஷயங்கள் நம்ம மக்களை கடுப்பாக்கி வச்சிருக்கு.
உண்மைய சொல்ல போனா வெறுப்ப சம்பாதிச்சு வச்சிருக்கோம்.
இன்னொரு காரணமும் இருக்கு.
தரமான படைப்புக்கள் வந்தால் கூட நம்ம மீடியாக்கள் நம் கலைஞர்களை கணக்கெடுப்பதில்லை.
ஆனா இந்தியாவில் கலையும் ஊடகமும் சிவனும் பார்வதியும் போல.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிச்ச பாட்டு ஏனைய ஊடகங்கள்ல அசால்டா போடுவான்.
அதே நாங்க? ஷமீல்ட பாட்டா? அவர் வேற சேனல். எங்கடயில ப்ரொமோட் பண்ண கூடாது ன்னு சொல்லுவோம்.
ஆனா இந்தியால மீடியா வேற்றுமை இல்லை. மகாபா போய் வேற இவன்ட்ல ஹோஸ்ட் பண்ணிட்டு வருவான். அதையே நான் இங்க பண்ணா.. “ரூபன் வெளிய போங்கோ” ன்னு சொல்லி ஒரு மாச சேலரியைும் ப்ளொக் பண்ணிடுவாங்க.
வளர்த்து விடனும் தானும் வளரனும்ன்னு இங்க யோசிக்கிறவங்க ரொம்ப கம்மி.
முதலில் தரமான கலையை படைக்க முயற்ச்சி செய்வோம்.
அப்பறம் சிவமணி, அர்ஜித் சிங், எட் ஷிரான் இவங்ககூட எல்லாம் போட்டி போடலாம்.
வீட்ல நாலு பேரும், ஊர்ல நாப்பது பேரும், பேஸ்புக்ல நானூறு பேரும் சப்போர்ட் பண்றதெல்லாம் ஒரு அச்சீவ்மண்ட் இல்ல.
உலகம் நம்மல அடையாளம் கண்டுக்கொள்ளனும்.
அதுவரைக்கும் நீ நான் எல்லாமே நிற்பது புகழின் கடைசி வரிசையில்தான் ப்ரோ!