ஒஸ்கார் விருது விழாவில் விருது பெற்ற வில் ஸ்மித் தொகுப்பாளர் கிரிஷை அடித்தது தொடர்பாக நடிகை சத்யா விக்டர் அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
எனக்கு கணவனின் ஆதரவு மட்டுமே இருந்தது
எந்நேரமும் பொண்டாட்டியை சொந்தக்காரர்கள் கிட்ட விட்டுக்கொடுத்து, body shaming பண்ணி, bully பண்ணி, sexist joke அடிப்பதை வேலையாக கொண்டிருக்கும் பலர் முகத்தில் அறைந்திருக்கிறார் வில் ஸ்மித்.என்னளவில் வில் ஸ்மித் செய்தது மிகச் சரியே.
கூட்டத்தில் மைக் கிடைத்துவிட்டால் யாரை வேண்டும் என்றாலும் எவ்வளவு ஆனாலும் பகடி செய்யலாம் என்ற நிலை மாறவேண்டும் . Most important ஒருவர் உடலை அடுத்தவர் நகைப்புக்கு உரியதாக மாற்றுவது பண்பற்றது, காட்டுமிராண்டித்தனமானது.
எள்ளலுக்கு உள்ளாகும் நபருக்கு வாழ்நாள் முழுக்க வலிக்கும் காயம் ஏற்படுத்தக் கூடியது ( மற்றவர்களால் எனக்கு ஏற்பட்டது இன்னும் மாறாமல் இருக்கு)இந்த உடல் யாருக்கும் அவரவர் தேர்வு அல்ல. எல்லா உடல்களும் அழகானவை;
போற்றுதலுக்கு உரியவை. மனைவியைக் கிண்டல் செய்தவரை வில் ஸ்மித் அறைந்தார். இங்கே எத்தனை கணவர்கள் தங்கள் மனைவியின் உருவத்தை பகடி செய்யாமல் இருக்கிறீர்கள்?