JAY DC யின் ஆதிரையன் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.
பாடலில் JAY DC யின் மொத்த திறமையும் சிவ தாண்டவமாக திரையில் வந்துள்ளது.
பாடலில் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
Rj பாரதியின் காதலி என்ற Youtube பயனாளி இவ்வாறு பதிவிட்டுள்ளார்
என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை கிட்டத்தட்ட 5 தடவைகளுக்கு மேல் பார்த்தும் கேட்டும் இரசித்து கொண்டிருக்கிறேன்……. என்னம்மா.பண்ணிருக்குறீங்க…… வேற மாரி இருக்கு…..இப்படி ஒரு படைப்பாற்றல் மிக்கவர்கள் எம் இலங்கை மண்ணில் உள்ளனரா… என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள்….. உங்கள் படைப்புகளின் இரசிகையாய் இன்று முதல் நானும்……..
பிரதீப் சார்ள்ஸின் இயக்கத்திலும் ஒளிப்பதிவில் வெளியாகியுள்ள ஆதிரையன் இந்த பாடல் குழுவின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
சுதர்சன் ஆறுமுகத்தின் குரல் சிவனின் மீதுள்ள பகுதியை அதிகரிக்க வைக்கிறது.
Semma Beatz இசைக்கு செந்தமிழனின் வரிகள் கச்சிதமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஆதிரையன் சிவ தாண்டவம்
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்