நேற்றைய நாள் கண்ணகி கலாலயம் மற்றும் ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்க கலையரண் அமைப்புடன் இணைந்து “உலக நாடக தினத்தை” முன்னிட்டு நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை மிகவும் மகத்தான செயலாகும்.
இது தொடர்பாக கண்ணகி கலாலய இளங்கோ சுதாகர் இட்ட பதிவு
கண்ணகிகலாலயம் தமது 20 வது ஆண்டை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் கடந்து வந்தவை ஏராளம்.
அதில் பல சமூக சேவைகள் , நாடக நிகழ்வுகள், கருத்தரங்குகள், கௌரவ விருது நிகழ்வுகள் என்பது மட்டுமன்றி விழிப்புணர்வு நிகழ்வுகளையும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக நடாத்தியுள்ளது.
அதில் சர்வதேச அன்னையர், தந்தையர், ஆசிரியர், மகளிர் தினங்களும் உள்ளடங்கும். நேற்று “உலக நாடக அரங்கியல் தினம்” அதனை முன்னிட்டு எம்மால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் யாழ்பாணம், மட்டக்களப்பு, தெஹியோவிட்ட, கண்டி பகுதியை சேர்ந்த கலை ஆர்வம் மிக்கவர்களும் தலை நகரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதுவரை தமது கலைப்பயண வாழ்வில் அறியாத தெரியாத பல விடயங்களை கற்று கொண்டாதாக தமது கருத்துப்பதிவில் பதிவிட்டுள்ளதுடன் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு எம்மிடம் தயவாக கேட்டு கொண்டுள்ளனர்.
நேற்றை நிகழ்வு முற்று முழுதாக இலவசமாக நடத்தப்பட்ட நிகழ்வு என்பதே கூறவேண்டும்.
காலை உணவு, பகல் உணவு மாலை சிற்றுண்டி, தாகத்தை தணிக்கும் தண்ணீர் இவற்றை சிறப்பாக செய்ய அரங்கம், அமர கதிரைகள், புகைப்படம் அதனை வெளியிடும் ஊடகம் என அனைத்துமே எமக்கு இலவசமாகவே வழங்க முன் வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி கூறும் இத்தருணத்தில் குருவை தெய்வத்தின் ஸ்தானத்தில் வைத்து போற்றும் நாம் நேற்றைய நாளில் பயிற்சி பட்டறை நடாத்திய எந்த ஆசானும் குரு தட்சணை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை குறிப்பாக கூறவேண்டும்.
நான் தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டு இந்நிகழ்வு பற்றி கூறியவுடன் தமது பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியிலும் இதற்கென நேரம் ஒதுக்கி வருகை தந்து தமது பங்களிப்பை செய்தமைக்கு இதய பூர்வமான பாராட்டுகளும் நன்றிகளும்.
தொடர்ந்து பல்வேறுபட்ட புதிய சிந்தனையுடன் இன்னும் பல விடயங்களை நாம் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளோம்.. கற்றபித்தவர்களுக்கும் அதனை கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க முன் வந்தவர்களுக்கும் எமது கண்ணகி கலாலயம்கலைஞர்கள் சார்பில் இதயபூர்வமான பாராட்டுக்களும் நன்றிகளும் மீண்டும் ஒரு முறை.
நமது கலைஞர்களின் உங்கள் இணையதளத்தின் வாழ்த்துக்கள்